ஜோ பைடனின் ஆஸ்திரேலியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

#India #PrimeMinister #Australia #world_news #Japan
Mani
2 years ago
ஜோ பைடனின் ஆஸ்திரேலியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஜி7 உச்சிமாநாடு ஜப்பானில் நடைபெறவுள்ளது, மே 19 முதல் 21 வரை ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்துகொள்வார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மே 24 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் 3வது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரை அதிபர் பைடன் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜோ பைடன் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அவர் தனது திட்டங்களை மாற்றிக்கொண்டு மற்ற முக்கிய தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கு வர வேண்டியிருந்தது. இந்த மாற்றம் குறித்து ஆஸ்திரேலியாவின் தலைவரிடம் கூறப்பட்டது.

அமெரிக்காவில் நிலவி வரும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பான முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!