கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்பு
#SriLanka
Kanimoli
2 years ago
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் வசித்து வந்த கார்த்திகேசு திருப்பதி (வயது 65) என்பவர் எரிந்த நிலையில் அவரது இல்லத்தில் இருந்து இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரது மனைவி உயிரிழந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.