பாஸ்டர் ஜெரோமுக்கு எதிராக ஞானசார தேரர் சிஐடியில் முறைப்பாடு

#SriLanka #Complaint #Gnanasara Thero #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பாஸ்டர் ஜெரோமுக்கு எதிராக ஞானசார தேரர் சிஐடியில்  முறைப்பாடு

பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

 இந்த போதகரின் செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் இழக்கப்படும் எனவும் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவர் எழுத்துமூலமான முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கிறிஸ்துவ அடிப்படைவாத கும்பல் மிக வேகமாக மதமாற்றத்தை பரப்பி வருவதாகவும், அந்த சதியில் இந்த மத போதகரும் ஒரு அங்கம் என்றும் அவர் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவருக்கு எதிராக சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கலகொட அத்தே தேரர் தனது முறைப்பாட்டில் வலியுறுத்தியுள்ளார்.

 இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்று (16ம் திகதி) குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!