பாகிஸ்தானில் இரு பழங்குடியினருக்கு இடையே மோதல் - 15 பேர் பலி
#Death
#Arrest
#Pakistan
#Fight
Prasu
2 years ago
பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள தர்ரா ஆடம் கெஜ் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தின் எல்லையை நிர்ணயம் செய்வது தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெஸ் பழங்குடியினருக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இரு பழங்குடியினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
போலீசார் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலை நிறுத்தினர். காயம் அடைந்தவர்களை மீட்டு பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.