புலம்பெயர்ந்துள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முடிவு

#SriLanka #Home
Kanimoli
2 years ago
புலம்பெயர்ந்துள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முடிவு

புலம்பெயர்ந்துள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16) நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகேவுடன் இடம்பெற்றதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் தேவைக்கு ஏற்ப நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமிய தனிநபர் வீட்டுத் தொகுதிகளாக இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதிப் பங்களிப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய செயலாளர்களுடனும் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாகவும், தூதரகங்கள் ஊடாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!