6 முதல் 9 மற்றும் 10 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பாடங்கள் ..
தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய பாடங்கள் 6 முதல் 9 மற்றும் 10 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு தொடங்கி நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மற்றும் சர்வதேச கல்வி நிலைக்கு ஏற்ப கற்பிக்கப்படும்.
என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் . தேர்வு செய்யப்பட்ட 20 பள்ளிகளில் ஜூன் மாத இறுதிக்குள் இதற்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.
பொதுநலவாய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.
மேலும் , “இந்தப் புதிய பாடங்களைக் கற்பிப்பதுடன், மாணவர் சமூகத்தினரிடையே ஆங்கில மொழிப் பயன்பாட்டைப் பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
என்றும், இவை எதிர்காலத்தில் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .