ஒஸ்மானியா கல்லூரி அருகே மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர் தொடர்பில் வெளிவந்த தகவல்
#SriLanka
#Arrest
#Police
#School Student
Soruban
2 years ago
இன்றையதினம் காலை மாணவி ஒருவரை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லும்போது, ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகே ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்தார்.
இதனை அவதானித்த ஊர் மக்கள் அவரை விசாரித்த போது அவர் சரியான பதில் வழங்காததால் அவரை தாக்கி விட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் மனநல சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.