கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தமை ஒரு சூழ்ச்சி - நாமல் ராஜபக்ஷ,

#SriLanka #Mahinda Rajapaksa #Gotabaya Rajapaksa #Namal Rajapaksha
Kanimoli
2 years ago
கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தமை ஒரு  சூழ்ச்சி - நாமல் ராஜபக்ஷ,

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்த சூழ்ச்சி குறித்து நேற்று (15) வெளிப்படுத்தினார். அவர் இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; ‘எனக்கு போராட்டத்துடன் பிரச்சினைகள் இல்லை, போராட்டக்காரர்களுடன் பிரச்சினை உண்டு. ஆர்ப்பாட்டதாரர்களின் விதிகளில் எனக்கு பிரச்சினை உண்டு. அவர்களை தூண்டி விட்டவர்கள் தொடர்பில் எனக்கு பிரச்சினை உண்டு. 

அவர்களை பாவித்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எனக்கு பிரச்சினைகள் உண்டு. எனினும் மிகவும் குறைந்தளவிலான ஒரு கூட்டம் உண்மையில் மாற்றத்தினை விரும்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை நான் மறுக்கவில்லை. மணித்தியாலங்கள் பல மின்வெட்டு இருக்கும் போது எரிபொருள் வரிசைகளில் நிற்கும் போது தனது பிள்ளையினை பாடசாலைக்கு சேர்க்கும் போது பெற்றோர்கள் அதிகாரிகளின் பின்னால் செல்லும் போது அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் போது அரச ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் சிரமம், கடவுச்சீட்டு வரிசைகளில் நிற்கும் போது அதற்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பொருளாதார அபிவிருத்தியினை கொண்டு வர வேண்டும் என சிலர் தெரிவிக்கின்றனர். அவர்களது மனசாட்சி அவ்வாறு சொல்லுவதற்கு அரசியல் என்று வரும் போது அவர்களுக்கு அவ்வாறு பிரசித்தமாக சொல்லுவதற்கு முடியவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை யாரும் சொல்லுவதில்லை. ஏன்? அவர்கள் மனசாட்சிப்படி பேசுவதில்லை..’என தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!