தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் நுழைந்த திருடர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு

#SriLanka #Colombo #Railway #Lanka4 #GunShoot #sri lanka tamil news #Station
Prathees
2 years ago
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் நுழைந்த திருடர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு

புகையிரத திணைக்களத்தின் தெமட்டகொட டிப்போவிற்குள் நுழைந்த மூன்று திருடர்களை கட்டுப்படுத்த புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

 புகையிரத நிலையத்திற்குள் பிரவேசித்த மூன்று திருடர்களில் ஒருவர் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் இருந்து துப்பாக்கியை திருட முற்பட்ட போது அங்கிருந்த மற்றைய புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வானத்தை நோக்கி சுட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

 மூன்று சந்தேக நபர்களில் இருவர் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். 

 குறித்த சந்தேகநபர்கள் புகையிரத நிலையத்திலிருந்து டீசல் செப்பு கம்பிகள் மற்றும் புகையிரத உதிரி பாகங்களை திருட முயற்சித்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!