பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு முழு ஆதரவு: உலக வங்கி

#SriLanka #economy #World Bank
Mayoorikka
2 years ago
பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு முழு ஆதரவு: உலக வங்கி

பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.

 நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நேற்று (15) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 இலங்கையில் நலன்புரி நலத்திட்டம் பற்றி விரிவாக விவாதித்த உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

 இந்தியாவில் நலன்புரி திட்டங்களின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட ஐயர், இலங்கையின் நலன்புரி செயல்பாட்டிற்கான தனது பாராட்டையும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!