மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது

#SriLanka #Power station #kanchana wijeyasekara
Kanimoli
2 years ago
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது

ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட மின் கட்டண யோசனை இன்று (15) பிற்பகல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் மின் கட்டண திருத்த முன்மொழிவுகளை சமர்பிக்கும் செயல்முறையைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய திகதிகளில், மின் கட்டண திருத்தத்தின்படி முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும்.

 இந்த ஆண்டுக்கான மின் உற்பத்தித் திட்டம் மற்றும் மின்சாரத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் போது குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்கும் நோக்கில் இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!