மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

#SriLanka #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
2 years ago
மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

வவுனியா - மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

 வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் பயணித்த போது நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி, அருகில் இருந்த பாலத்துடன் மோதியுள்ளது.

 இவ்விபத்தில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த தனுஜன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். 

 இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!