அடுத்த வாரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்படவுள்ள விஜயதாச ராஜபக்ஷ!
எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து குறித்து வழக்கு தாக்கல் செய்கையில் இலஞ்சம் பெற்ற நபரை வெளிப்படுத்தியமை குறித்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அடுத்த வாரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) அழைக்கப்படவுள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யும் போது நபர் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் வெளிப்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரின் வெளிநாட்டுக் கணக்குகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவினருடன் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சீடியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கைக் கடலில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள்கப்பலினால் ஏற்பட்ட சேதங்களை மீள மதிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுவதாக கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.