பாகிஸ்தானின் நிலைமையை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது

#America #world_news #Pakistan
Mani
2 years ago
பாகிஸ்தானின் நிலைமையை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விலைவாசி அதிகரித்து, நாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, முன்தினம் இம்ரான்கானுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, மதிப்பு அடிப்படையில் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.300ஆக சரிந்துள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் வெடித்த வன்முறை ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க ராணுவம் தலையிட்டதால், பாகிஸ்தானின் ரூபாய் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. நாணய மதிப்பு 3.3% சரிந்து ஒரு டாலருக்கு ரூ.300 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!