முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டமானது இன்று பொத்துவில் பகுதியில் இடம்பெற்றது.

#SriLanka #Mullaitivu #War #Mullivaikkal
Kanimoli
2 years ago
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டமானது இன்று  பொத்துவில் பகுதியில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு தழுவியரீதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டமானது இன்று பிற்பகல் 2 மணியளவில் பொத்துவில் பகுதியில் இடம்பெற்றது.

 பொத்துவில் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்று வழங்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறு அடங்கிய துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டது.

 இதன்பொழுது பொதத்துவில் பொலிசார் ஜீப்ரக வாகனத்தில் வருகை தந்து அச்சுறுத்தும் பாணியில் விசாரத்த நிலலயில் இராணுவ சீருடையணிந்த ஒருவரும் புலனாய்வாளர்களும் குறித்த பகுதியில் வந்து ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!