வவுனியாவில் தேன் எனக் கூறி சீனி பாணியை விற்பனை செய்த நபர்
#SriLanka
#Vavuniya
#Arrest
#Lanka4
#sri lanka tamil news
#Health Department
Prathees
2 years ago
சீனியில் தயாரிக்கப்பட்ட பாணியை தேன் எனக் கூறி விற்பனை செய்த நபரை வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர், சீனி மற்றும் தண்ணீர் மற்றும் தேனீக்களின் பாகங்களை கலந்து, உருக்கிஇ போத்தல்களில் அடைத்து விற்பனை செய்து வந்ததை பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட 268 சீனிப் பாகு போத்தல்கள் சந்தேகநபரிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டதையடுத்து அவர் அதனை பாரியளவில் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.