முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் பல்வேறு செயற்றிட்டங்கள்
#SriLanka
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு செயற்றிட்டங்கள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்னால் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இரத்ததான முகாமில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இணைந்து இரத்ததானம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.