லண்டன் தேம்ஸ் நதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

#China #Death #Women #London
Prasu
2 years ago
லண்டன் தேம்ஸ் நதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

கிழக்கு லண்டனில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேம்ஸ் நதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் திகதி சுமா பேகம் என்ற 24 வயது பெண் மாயமானதாக கூறி பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் முதற்கட்ட விசாரணையில் அவரது கணவரே கொலை செய்து சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து லியா ஆற்றில் வீசியதாக தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் நிபுணர்கள் குழு, ஆற்றில் சடலத்தை தேடும் பணிகளை துவங்கினர். 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பகல் சூட்கேஸுடன் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.மேலும், குறித்த தகவலை சுமா பேகத்தின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாகவும், அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடற்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சுமா பேகத்தின் கணவர் 45 வயதான அமினன் ரஷ்மான் கைது செய்யப்பட்டு, மே 4ம் திகதி அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டது.

மே 9ம் திகதி அவர் ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பெங்காலி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் அவரது பெயர், பிறந்த ஆண்டு உள்ளிட்ட தகவல்களை நீதிமன்ற உறுதி செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!