மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை
#Lanka4
Prabha Praneetha
2 years ago
மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பான தங்களது அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன் விலைகள் குறைவாக காணப்படுவதனால் கலால் வரி வருமானத்தில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், எனவே அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் திறைசேரிக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது.
உற்பத்தி வரியை குறைக்க வாய்ப்பு இருந்தால், மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பாளர்கள் சுட்டிக் காட்டுவதுடன், அடுத்த இரண்டு மாதங்கள் அவற்றின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.