அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு: சஜித் பிரேமதாச

#SriLanka #Sajith Premadasa #government
Mayoorikka
2 years ago
அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற  ஆதரவு: சஜித் பிரேமதாச

நாட்டுக்கான சரியான பொதுத் தீர்மானங்களை எடுக்கும் போது நிபந்தனையற்ற விதத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று (13) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 பாராளுமன்ற துறைசார் கண்காணிப்பு சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை அறிவிக்கும் செயலமர்வு இன்று காலை கொழும்பில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!