தெஹியத்தகண்டியில் பல வெடிபொருட்களுடன் இருவர் கைது
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
தெஹியத்தகண்டிய, தியவித்தகம வீதித்தடையில் வெடிபொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போதே பொலிசார் இந்த வெடிபொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
14 டெட்டனேட்டர்கள், 1 கிலோ அம்மோனியா, 50 கிராம் கன்பவுடர் மற்றும் நூல் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
அவர்களை இன்று தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.