13 போலியான ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

#SriLanka #Arrest #Police #Lanka4 #sri lanka tamil news #money
Prathees
2 years ago
13 போலியான ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

13 ரூபாய் 5000 போலி நாணயத்தாள்களுடன் தம்பதிகள் உட்பட மூவர் களுத்துறை மற்றும் மஹியங்கனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர் களுத்துறை வடக்கு, கல்பத்த பிரதேசத்தில் அமைந்துள்ள கடையொன்றில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இது தொடர்பில் கடையின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சந்தேகநபர், அவருடன் முச்சக்கரவண்டியில் வந்த அவரது கணவர் மற்றும் முச்சக்கரவண்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், களுத்துறை தெற்கில் உள்ள வீடொன்றினுள் மேலும் 11 ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மற்றும் அச்சடிக்கும் இயந்திரம் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட தம்பதியினர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 இதேவேளை, நட்டஈடு வழக்கு தொடர்பான பணத்தை செலுத்திய சந்தேக நபரை ஐயாயிரம் ரூபா போலி நாணயத் தாள்களுடன் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 சந்தேகநபர் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் செலுத்திய 21,000 ரூபா பணத்தில் போலி நாணயத்தாள் இருப்பதை நீதிமன்ற அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 அதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய கிரந்துருகோட்டையை வசிப்பிடமாக கொண்டவர், மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!