நாடு முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை: வீதித்தடைகளில் திடீர் சோதனை

#SriLanka #Police #Road #Lanka4 #search #sri lanka tamil news
Prathees
2 years ago
நாடு முழுவதும் விசேட தேடுதல்  நடவடிக்கை:  வீதித்தடைகளில் திடீர் சோதனை

நாடு முழுவதும் நேற்று (12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 நாட்டின் அனைத்து முக்கிய வீதிகளையும் உள்ளடக்கிய குற்றவியல் விசாரணைகள், போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளின் போக்குவரத்து மற்றும் சந்தேக நபர்களைத் தேடுதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 தொடர்ந்து வீதித் தடைகளை ஏற்படுத்தி இரவு பகலாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 வீதிகளில் செல்லும் வாகனங்களின் சீரற்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் மற்றும் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் இரவு ரோந்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!