பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுட்பமான முறையில் போதைப்பொருள் கடத்திய மூவர் கைது
#India
#Arrest
#Pakistan
#drugs
#Drone
Prasu
2 years ago
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஆளில்லா வானுர்தி மூலம் போதைப்பொருள் கடத்தல் செய்ததாக மூன்று இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆடவர்களை சிறப்பு படை அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு வரும் அந்த போதைப்பொருள் பஞ்சாப் மற்றும் பல இந்திய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
ஆடவர்கள் போதைப்பொருளுக்காகச் சட்ட விரோதமாக ஹவாலா முறையில் பணப்பரிவர்த்தனையும் செய்துள்ளனர். பிலிப்பீன்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளது.
ஆடவர்களை கைது செய்யும் போது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.