தொழுகைக்கு தடை: சட்ட விரோதமாக கட்டப்பட்டதா பள்ளிவாசல்?
மஹரகம – கபூரிய்யா அரபுக்கல்லூரியின் நுழைவாயில் மூடப்பட்டதால் விடுமுறையின் பின்பு கல்லூரிக்கு கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வருகை தந்த மாணவர்களும், பெற்றோரும் நேற்று முன்தினம் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றது.
இதுதெடர்பில் கபூரிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தெளிவு அறிக்கை ஒன்றுரை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை வருமாறு: பொது மக்களின் கவனத்திற்கு” என்ற “NDH ABDUL GHAFFOOR TRUST” ன் அறிவித்தலுக்கு கபூரிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தெளிவு, 10-May-2023 என்ற திகதியிடப்பட்ட அறிவித்தலில் “எதிர்வரும் 2023 மே மாதம் 08 திகதி தொடக்கம் அதிபர் ஜெஹான் மௌலானா அவர்கள் கல்லூரி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்” என்ற பொருளில் பொது மக்களுக்கான ஓர் அறிவித்தல் பகிரப்பட்டுள்ளது.
மார்ச் 16ம் திகதி கல்லூரி விடுமுறை வழங்கப்பட்டு 2023 மே 09ம் திகதி ஆரம்பிக்கும் என்ற அதிபரின் அறிவித்தலை மார்ச் 20ம் திகதியே கல்லூரியில் பார்வைக்கு இட்டனர்.
இவ்வாரு தான் NDH AGT ன் செயலாளரினதும் கல்லூரி அதிபரினதும் அறிவித்தல்கள் இருக்கின்றன.
குறித்த விடுமுறை அறிவித்தலானது, 2023 மார்ச் மாதம் 16ம் திகதிக்கு முன்னர் இருந்த, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கானதே என்பது தெளிவு. எனவே அதிபர் ஜிஹான் மௌலானாவின் அறிவித்தலை மதித்தே மாணவர்கள் கல்லூரியில் இருந்து விடுமுறைக்காக சென்று கடந்த மே மாதம் 09ம் திகதி தமது பெற்றார்களுடன் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
எனினும் துரதிர்ஷ்டவசமாக விடுமுறையில் இருந்து வந்த மாணவர்களுக்கு கல்லூரியினுள் நுழைவதற்கான அனுமதி இந்த NDH AGT ன் செயலாளரின் வேண்டுகோளிற்கினங்க மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் பழைய மாணவர்கள் எனக்கூறிக்கொண்டு கல்லூரியினுள் அத்துமீறி உள்நுழைய முயற்சித்தனர் என்ற உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியையும் கூறியுள்ளார்.
அன்றைய தினம் எந்தவொரு பழைய மாணவனும் (மாணவர்கள் மற்றும் பெற்றார்களுடன்) கல்லூரி வளாகத்திற்கு செல்லவில்லை எனவும், விடுமுறை முடிந்து வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றார்கள் எந்தவிதமான வன்முறையான செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதயும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.
விடுமுறை முடிந்து தமது பெற்றார்களுடன் வந்த மாணவர்கள் தமது அடிப்படை உரிமை மீரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் மிகவும் நிதானமாவும், பொறுப்புடனுமே நடந்து கொண்டனர்.
எனினும் அஸ்மத்தும் அவரது சகாக்களும் தங்களது சுய இலாபங்களை அடைந்து கொள்வதற்காக உண்மைக்கு புறம்கான ஒரு விடயத்தைக் கூறி இன்று முதல் (12-05-2023) மறுஅறிவித்தல் வரை ஜும்ஆ தொழுகைக்கேனும் கல்லூரி பள்ளிவாயல் பொதுமக்களுக்காக திறந்து கொடுக்கப்பட மாட்டாது என்ற அறிவித்துள்ளனர்.
சுமார் 1000 பேரளவில் ஜும்ஆவிற்காக அங்கு வருவது வழக்கம். கல்லூரியின் முன்னைய நிர்வாகங்களோடும், பழைய மாணவர்களோடும் எப்போதும் முரண்படும் அஸ்மத் கபூர், பொது மக்கள் பள்ளியை பாவிப்பதையும், பழைய மாணவர்களது முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட பள்ளி சட்டவிரோதமானது எனவும், மூன்று கட்டங்களைத் தவிர ஏனையவை (மஸ்ஜித் உட்பட) அகற்றப்பட வேண்டியவை எனவும் அடிக்கடி கூறுவது வழக்கம்.
எனவே இந்த பின்னணியிலே மேற்படி ஜும்ஆவிற்கான தடையை சிந்திக்க வேண்டியுள்ளது. பாரமப்பரிய உடமையொன்றை தனியார் உடமையாக்க முயற்சிக்கின்ற அஸ்மத்தும் அவர் சார்ந்தவர்களதும் முயற்சிக்கு ஜிஹான் மௌலான மற்றும் அவரது நிர்வாக உறுப்பினர்கள் துணைபோகவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
அப்பட்டமான பொய்களையும் வதந்திகளையும் பரப்பித்திரியும், அஸ்மத்தும், செயலாளர் ஹூஸைன் கபூரும் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும். சுமார் 2.5 ஏக்கருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கல்லூரி நிலப்பரப்பு மொத்தமாக கல்லூரியின் பாவணைக்காக திறந்து கொடுக்கப்பட வேண்டும்.
பொது மக்களுக்கு ஐங்காலத் தொழுகை, ஜும்ஆ, பெருநாள் தொழுகைகள், ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்க செயல்பாடுகளுக்கு எநத் தடையுமின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும்.