சவூதி அரேபியாவில் சித்ரவதைக்கு ஆளான மனைவியை அழைத்து வர பணமில்லை: கண்கலங்கும் கணவர்

#SriLanka #Minister #Lanka4 #sri lanka tamil news #Foriegn #SaudiArabia
Prathees
2 years ago
சவூதி அரேபியாவில் சித்ரவதைக்கு ஆளான மனைவியை அழைத்து வர பணமில்லை: கண்கலங்கும் கணவர்

சவூதி அரேபியாவில் உள்ள வீடொன்றில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட மனைவியை இந்த நாட்டிற்கு அழைத்து வர இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாயை செலுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

 கம்பளை, அங்குருமுல்ல பஹல் வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சச்சினி மதுஷானி குணசேகர தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் பேரில், சவுதி தூதரகத்திற்கு கொண்டு வரப்பட்டாள், ஆனால் அவளை இந்த நாட்டிற்கு அழைத்து வர ஏஜென்சிக்கு இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாயை செலுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்ததாக அவரது கணவர் கூறுகிறார்.

 இத்தொகையை செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் 27 இலட்சம் ரூபாவை செலுத்த நேரிடும் என சவூதி தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாக வட்டேகெதரவை சேர்ந்த ஷிரந்த மதுசங்க திலகரத்ன மேலும் தெரிவித்தார்.

 கம்பளை வெளிநாட்டு சேவை நிறுவனம் ஒன்று தலையிட்டுஇ தனது மனைவியை வீட்டு வேலைக்கு அனுப்பியதற்காக நான்கு இலட்சம் ரூபாவும் பின்னர் 13,000 ரூபாவும் தருவதாக அறிவித்த போதிலும், அதில் எதையும் தமக்கு வழங்கவில்லை என திலகரத்ன கூறுகிறார்.

 சவூதி தூதரகத்தில் இருந்து தனது மனைவியை அழைத்து வருவதற்காக பலமுறை வெளிநாட்டு சேவை பணியகத்திற்குச் சென்ற போதும், அவர்கள் ஏஜென்சியின் பக்கம் நின்றதாகவும், தனது மனைவியை அழைத்து வர உதவவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

 இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கும் அவர் எந்த கூலி வேலைக்குச் செல்ல முடியாமலும், சரியாக உணவு வழங்குவதற்கும் பணம் கிடைக்காமல் தவிப்பதாக தெரிவித்துள்ளதார்.

 சவூதி தூதரகம் கோரியுள்ள 27 இலட்சம் ரூபாவையோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கோரியுள்ள மூன்று இலட்சம் ரூபாவையோ கண்டுபிடிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

 இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு நீதி கிடைக்க இந்த குற்றத்திற்கு காரணமான தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!