துவேசம் பேசிய பிக்குவே வடக்கில் எதற்கு புத்தவிகாரை என இராணுவத்திற்கு எச்சரிக்கை

#SriLanka #Temple #Buddha
Prasu
2 years ago
துவேசம் பேசிய பிக்குவே வடக்கில் எதற்கு புத்தவிகாரை என இராணுவத்திற்கு எச்சரிக்கை

"தென்னிலங்கையில் இருக்கிற விகாரைகள் பராமரிக்கப்படாமல் உள்ள நிலையில், வடக்கு கிழக்கில் எதற்காக விகாரைகள். பெளத்த, சிங்கள மக்கள் இல்லாத இடத்தில், ஏன் இத்தனை விகாரைகள்" இவ்வாறு, யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் கொந்தளித்துள்ளார். 

 வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

 "இராணுவம் எதற்காக புத்த விகாரைகளை அமைப்பதில் மும்முரமாக நிற்கிறது, இராணுவத்தினர் அவர்களின் வேலையை பார்க்க வேண்டும். ஆலயம் அமைப்பது, பராமரிப்பது இராணுவத்தின் வேலையல்ல, அது மதகுருமாரின் வேலைகள். அத்துடன் நெடுந்தீவு மற்றும் மாதகலில் இவ்வாறு விகாரைகளை அமைக்க வேண்டும் என என்னிடம் வந்தார்கள், நான் அவர்களை விரட்டி விட்டேன். நான் சிங்களவன் தான், ஆனால் எப்போதும் நியாயத்துடன் நடந்து கொள்வேன், எவராக இருந்தாலும் நேர்மை இருக்க வேண்டும்." என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு கடுமையாக சாடியுள்ளார். அவர் தெரிவித்த குறித்த விடயங்களானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!