சீனாவில் ஊழல் குற்றச்சாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை

#China #Arrest #money #officer
Prasu
2 years ago
சீனாவில் ஊழல் குற்றச்சாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை

சீனாவில் ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விசாரணை மேற்கொண்டார். 

ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியதாக இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த ஊழல் குற்றச்சாட்டில் மாநில அளவிலான அதிகாரிகள், துணை மாநில அதிகாரிகள், ராணுவகமிஷன் உறுப்பினர்கள், டஜன்கணக்கான மந்திரிகள் அலுவலக அதிகாரிகள் என பலர் சிக்கி இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. 

இதில் முக்கிய அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

 முதல் காலாண்டு ஊழல் எதிர்ப்பு அறிக்கையில் 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!