களுத்துறை மாணவியின் தொலைபேசியைத் தேடி களு கங்கையில் தேடுதல் நடவடிக்கை
#SriLanka
#Death
#Police
#Student
#Investigation
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
களுத்துறையில் உள்ள லொட்ஜ் ஒன்றில் ஐந்து மாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த களுத்துறை நாகொட பிரதேசத்தை சேர்ந்த திஹார நிர்மானி நிஸ்ஸங்க சில்வாவின் கையடக்க தொலைபேசியை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் பொலிஸ் நீர்மூழ்கிக் குழுவினர் இன்று பிற்பகல் களு கங்கையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த சிறுமி நேற்று 6ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதுடன், குறித்த சிறுமியுடன் விடுதிக்கு சென்ற பெண்ணின் வாக்குமூலத்தில் அவரது கைத்தொலைபேசி களு ஆற்றில் வீசப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதன்படி, இரண்டு பொலிஸ் நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் மூன்று கடற்படை நீர்மூழ்கி வீரர்கள் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.