விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்திட்டம் - யாழ். மாவட்டம்

#SriLanka #Healthy #Dengue
Kanimoli
2 years ago
விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்திட்டம் - யாழ். மாவட்டம்

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் அதிகரித்து காணப்படுகின்றது. மழை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கு அபாயநிலை காணப்படுகின்றது. இந்நிலையில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை முன்னெடுக்காதுவிடின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் மாதங்களில் அதிகரித்துச் செல்லும் என அஞ்சப்படுகின்றது. என யாழ் மாவட்ட டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

 எனவே இதனை கருத்தில் கொண்டு வைகாசி மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகம் இணைந்து கழிவுக் கொள்கலன்களை உரிய முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

 இச் செயற்திட்டம் தொடர்பான கால அட்டவணை கிராமசேவகர் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். எனவே பொதுமக்கள், பொது அமைப்புக்கள் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!