உலகின் முதல் ஓட்டுநர் இல்லா பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது.!
#world_news
#Bus
#technology
Mani
2 years ago
ஸ்காட்லாந்தில் ஓட்டுநர் இல்லாத பயணிகள் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சோதனை ஓட்டம் முடிந்துவிட்டதாகவும் திங்கள்கிழமை முதல் எடின்பரோவில் இப்பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்தார்.
தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே முதன்முறை என்றும் அவர் குறிப்பிட்டார். சென்சார்கள் பொருத்தப்பட்டு, மணிக்கு 50 மைல் வேகத்தில் இயங்கும் வகையில் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முழு அளவிலான தானியங்கி பேருந்துகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு பேருந்திலும் 'பாதுகாப்பு ஓட்டுநர்' ஒருவர் பணியமர்த்தப்பட உள்ளார்.