அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஆண்ட்ரூ மெக்கார்த்தி நிலவின் மிகத்துல்லியமான புகைப்படம் டுவிட்டரில் பகிர்வு
அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் நிபுணரும் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரூ மெக்கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், நிலவின் மிகத் துல்லியமான புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அவரைப் பொறுத்தவரை, இந்த புகைப்படத்தை எடுப்பதற்காக 2 தொலைநோக்கிகளைப் பயன்படுத்தினார் மற்றும் இந்த படத்தைப் பிடிக்க 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானமேற்பட்ட தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்தார். அதிக துல்லியத்தை அடைய 2 வாரங்கள் அயராது உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படம் ஒரு ஜிகா பிக்சல் அளவு கொண்டது என்றும், இதனை அதே துல்லியத்துடன் பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தையும், அதை ஜூம் செய்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கிறார். இதை பார்க்கும் போது நிலவில் இருக்கும் சிறு பள்ளங்கள், குழிகளை கூட துல்லியமாக பார்க்க முடிகிறது.