அமெரிக்காவிலிருந்து 28 லட்சம் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்ததாக தகவல்!
மார்ச் 2020 இல், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதன் உச்சத்தில் இருந்தபோது, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது, இந்தக் கொள்கையானது கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற வழிவகுத்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், அமெரிக்காவில் 28 லட்சத்துக்கும் அதிகமான நபர்களை வெளியேற்றியுள்ளதாக மெக்சிகன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவற்றுள் பெரும்பாலானோர் மெக்சிகோ, கவுதமாலா, எல் சால்வடார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்றவர்களாவர்.
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் மெக்சிகோவில் விதிக்கப்பட்டிருந்த அவசர நிலை நேற்றுடன் காலாவதியானது. அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மெக்சிகோ குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவில் தூதரக உதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதாக மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.