இம்ரான் கானை கைது செய்ய வேறு வழிகளை தேடுவோம்: பாகிஸ்தான் அரசாங்கம்
பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி தொடர்ந்து மோசமாகி வருகிறது. அதுவும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இம்ரான் கானை விடுவித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இம்ரான் கானை கைது செய்ய வேறு வழிகளை தேடுவோம் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று பகிரங்கமாக தெரிவித்தார். நீதித்துறை இரட்டைக் கொள்கையைப் பின்பற்றுவதாக பாகிஸ்தானின் ஆளும் கட்சியும் குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.