கடவுச்சீட்டு பெறுதல்: குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்
#SriLanka
#Passport
Mayoorikka
2 years ago
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்காத எவரும் திணைக்களத்திற்கு வரவேண்டாம் எனவும், திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியவர்கள் மாத்திரம் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (12) தெரிவித்தார்.
மக்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களில் தயாரிக்கப்படும் என இலுக்பிட்டிய தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கு இந்த நாட்களில் ஏற்பட்டுள்ள நெரிசல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இலுக்பிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.