17 இலட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக 1.4 இலட்சம் கோடி செலவு! முன்னாள் நிதி அமைச்சர்

#SriLanka #government #money
Mayoorikka
2 years ago
17 இலட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக  1.4 இலட்சம் கோடி செலவு! முன்னாள் நிதி அமைச்சர்

17 இலட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக வருடாந்தம் செலவிடப்படும் 1.4 இலட்சம் கோடி ரூபாவுடன் ஒப்பிடுகையில், அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

 17 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளதாகவும், நாட்டின் வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் 76% இந்த 17 இலட்சம் பேரை பராமரிப்பதற்கே செலவிடப்படுவதாகவும் கருணாநாயக்க தெரிவித்தார்.

 ஒரு வருடத்தில் 104 டிரில்லியன் ரூபா செலவாகும் என்றும், இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை விமானம் மற்றும் வலையமைப்புக் கொள்வனவுச் சபை என்பன கடந்த நான்கு வருடங்களில் 1350 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகவும்  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

 இந்த பணத்தை சேமித்திருந்தால் 12 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனவும், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் 178,000 ரூபாவை சேமித்திருப்பார்கள் எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!