ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளது - கபீர் ஹாசிம்

#SriLanka #Parliament #srilankan politics
Kanimoli
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளது - கபீர் ஹாசிம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 நலன்புரிச் சட்டத்தின் கீழ் செலுத்தப்படாத நலன்புரிப் பலன்களை வழங்கும் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிலர் வறுமையில் இருந்து மீள முடியாமல் இருப்பதாகவும், பெரும் வருமான இடைவெளி காணப்படுவதாகவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டில் 11% இருந்ததாகவும், தற்போது வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 25% ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 இலங்கையில் சுமார் 55 இலட்சம் ஏழைகள் இருப்பதாகவும் முன்னைய புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்த போதிலும் இன்று நாட்டில் எண்ணிலடங்கா ஏழைகள் இருப்பதாகவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!