துறைமுகத்தில் சோதனை செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நீண்ட வரிசைகள் தோன்றியுள்ளது -தலைவர் சனத் மஞ்சுள

#SriLanka #Ship
Kanimoli
2 years ago
துறைமுகத்தில் சோதனை செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நீண்ட வரிசைகள் தோன்றியுள்ளது -தலைவர் சனத் மஞ்சுள

துறைமுக வளாகத்தில் இருந்து சுங்க பரிசோதனை நிலையம் வரை கொள்கலன் வாகனங்களை சோதனை செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மிக நீண்ட வரிசைகள் தோன்றியுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

 இதன் காரணமாக 600 முதல் 800 கொள்கலன்கள் பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும், வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து சுங்கச் சோதனைச் சாவடி வரையிலும் இந்த நீண்ட வரிசைகள் காணப்படுவதால், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 இது தொடர்பில் சுங்கப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த காலதாமதங்களை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!