கணவரை விவாகரத்து செய்யும் பின்லாந்து பிரதமர் சன்னா மரின்

#PrimeMinister #Women # divorce #Finland
Prasu
2 years ago
கணவரை விவாகரத்து செய்யும் பின்லாந்து பிரதமர் சன்னா மரின்

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது மூன்று வருட கணவரான மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில், மூன்று வருட திருமண வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

 இதுதொடர்பாக இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தின் தனித்தனி பக்கத்தில், "19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் இளமையில் ஒன்றாக வாழ்ந்தோம், ஒன்றாக இளமைப் பருவத்தில் நுழைந்தோம், எங்கள் அன்பான மகளுக்கு ஒன்றாக பெற்றோராக வளர்ந்தோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!