பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பிக்குகள் கைது
#SriLanka
#Arrest
#Police
#Sexual Abuse
#sri lanka tamil news
#Monk
Prathees
2 years ago
விஹாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் சுமார் மூன்று வருடங்களாக பிக்கு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாமனேர தேரரின் தாயார் நமகே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய மூவரும் இன்று பயாகலை பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறைஇ பயாகல பிரதேசத்தில் உள்ள கோரக்கதெனிய விகாரையில் வைத்து 43 மற்றும் 17 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.