ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு என தகவல்

#world_news #Earthquake #Japan
Mani
2 years ago
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு என தகவல்

ஜப்பானின் இன்று அதிகாலை 4:16 மணியளவில் தெற்கு சிபா மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் நிலப்பரப்பிலிருந்து 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் தேசிய புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகள் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளால் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!