இந்தியா -இங்கிலாந்து ராணுவப் பயிற்சி; பஜ்ரங்பலி கி ஜெய் என்று கோஷமிடும் ராணுவ வீரர்கள்

#India #world_news
Mani
2 years ago
இந்தியா -இங்கிலாந்து ராணுவப் பயிற்சி; பஜ்ரங்பலி கி ஜெய் என்று கோஷமிடும் ராணுவ வீரர்கள்

ஏப்ரல் 27 முதல் இன்று மே 11 வரை, இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ராணுவ வீரர்கள் இடையே கூட்டு ராணுவ பயிற்சியானது நடைபெற்றது.

ஏப்ரல் 26 அன்று, இந்திய விமானப்படை சி-17 விமானத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பரி பிளைன்ஸ் பகுதிக்கு புறப்பட்டு சென்றடைந்தனர்.

இறுதி நாளில் இன்று இந்திய இராணுவப் படைகள் முழக்கங்களை எழுப்பினர். போர்க்காலத்தில், வீரர்கள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த அல்லது தங்கள் எதிரிகளை பயமுறுத்துவதற்காக துணிச்சலான முழக்கங்களை எழுப்புவது வழக்கம்.

கூட்டு ராணுவப் பயிற்சி இன்று நிறைவடைந்ததையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் பாரத் மாதா கி ஜெய் என்றும் மற்றும் பஜ்ரங்பலி கி ஜெய் என முழக்கங்களை எழுப்பினர்.

இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை வளர்ப்பதே இந்த நிகழ்வின் முதன்மையான நோக்கமாகும். இதன் முக்கிய நோக்கங்களில் ஒருவருக்கொருவர் இராஜதந்திர போர் பயிற்சி முறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இந்த போர் பயிற்சி உதவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!