குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு
#SriLanka
#China
#Court Order
#Lanka4
#sri lanka tamil news
#monkey
Prathees
2 years ago
சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு 100,000,000 குரங்குகளை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி மனு தாக்கல் செய்யுமாறு அமைச்சர்கள் சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுற்றாடல் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதன்படி, இந்த மனு எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.