இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் நியமனம்

#SriLanka #Lanka4 #Tamilnews #srilankan politics
Prabha Praneetha
2 years ago
இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் நியமனம்

இலங்கை,சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இப்பதவிக்கு இவர் தெரிவாகியுள்ளமை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துமென நம்பப்படுகிறது. 

 சவூதிஅரேபியாவின் மன்னர் பஹட் பெற்றோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர், அந்நாட்டுடன் நெருக்கமான உறவிலுள்ளவர். சவூதிஅரேபியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனங்களின் தலைவர்கள் பலர், அமைச்சருடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற சக நண்பர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 அரபுமொழியில் பாண்டித்தியமும், ஹாபிழுமான அமைச்சர் நஸீர் அஹமடின் பாண்டித்தியம் இலங்கை முஸ்லிம்களின் கலாசார அபிலாஷைகளை அடைந்துகொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

 இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு சவூதியுட்பட அரபு நாடுகளின் ஒத்துழைப்பை பெறவும் இவரது தெரிவு வழிகோலும். காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் மற்றும் உள்நாட்டுக் கனிய வளங்களை சர்வதேச சந்தைப்படுத்தும் வியாபார வியூகங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!