தனியார் பஸ் கட்டணம் 12 சதவீதம் குறைக்கப்படுமா?

பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சில தொழிற்சங்க பிரதிநிதிகளின் நாசவேலை காரணமாக மக்கள் மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 60 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் 135 ரூபாவாகவும், டீசல் லீற்றர் 80 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் 45 ரூபாவாகவும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பஸ் கட்டணமும் இன்று நள்ளிரவு முதல் 12.9 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இன்று நள்ளிரவு முதல் புதிய பஸ் கட்டணத்தை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



