இறக்குமதி கதவுகளை மீண்டும் திறப்பதற்கான அறிகுறி
#Import
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#economy
#government
Prathees
2 years ago

இறக்குமதி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி பொருட்கள் தொடர்பில் உள்ளூர் திட்டங்கள் இருக்க வேண்டும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனை விரைவில் செலுத்த வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.



