வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு பதிலடிகொடுக்க இராணுவத்திற்கு பயிற்சி..?
#SriLanka
#sri lanka tamil news
#Security
#Lanka4
#government
#Tamilnews
Prathees
2 years ago

பொதுச் சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
எதிர்காலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவதாக ஊடகவியலாளர் ஒருவரின் வினாவிற்கு பதிலளித்த அமைச்சர், மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என்றார்.



