கனடாவில் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

#Canada #Gandhi #statue #supporters #Attack #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
கனடாவில் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். 

இந்திய தூதரகங்கள் முன்பு போராட்டம் நடந்தது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சைமன் பிரேசர் பல்கலைக்கழக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. 

இந்நிலையில், மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு கனடா நாட்டுத் தூதரை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே, கடந்த வாரம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் 6 அடி உயர மகாத்மா காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியனர். 

அதன் கீழே நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதி அட்டூழியம் செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!