ரணில் ஆட்சியும் தமிழர் உரிமை சூறையாடப்படுதலும். இன்னும் என்ன சாதனை நடக்குமோ புத்தபகவானே???

ரணில் விக்கிரமசிங்கே அவர்களின் 8 மாத கால சில நல்லிண முயற்சிகள்,
குருந்தூர்மலை ஆதி சிவன் கோவிலில் விகாரை கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றது
முல்லைத்தீவு மணற்கேணியில் தொன்மையான சைவ கோவில் அழிக்கப்பட்டு இருக்கின்றது
திருகோணமலை ராஜவந்தான் மலை கோவில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பௌத்த தொல்லியலாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது
கன்னியா வென்னீரூற்று அனுராதபுர கால தொல்லியல் என குறிப்பிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது
திருக்கோணேஸ்வரம் ஆலயம் 18 ஏக்கர் காணிக்குள் சுருக்கப்பட்டு இருக்கின்றது
மாதூறு ஓயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மயிலத்தமடு மேய்ச்சல் தரவை ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது
நொச்சியடி ஐயனார் ஆலய சூழல் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது
வவுனியா இராஜேந்திரகுளம் மற்றும் சூழ உள்ள பகுதிகளை தொல்பொருட் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது
பாரம்பரிய மீன்பிடிக்கு ஏற்ற கடற்கரைகள் எல்லாம் கடலட்டை பண்ணைகள் என்கிற பெயரில் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு இருக்கின்றது
மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே காணி அபகரிப்பு மற்றும் பௌத்தமயமாக்கல் என்பன நாள் தோறும் நடந்து வருகின்றன
மூதூர் கடற்கரைசேனை பகுதியில் பரக்கும்பர கடற்படைதளத்தினால் அபகரிக்கப்பட்ட 18 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்கள் 10 பேரை நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தி இருக்கின்றார்கள்
நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமண விகாரையில் புதிய கலசம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றது
மேற்குறிப்பிட்ட நல்லிணக்க முயற்சிகளின் தொடர்ச்சியாக,
நிலாவரை கிணற்றுக்கு அருகில் பௌத்த அடையாளச் சின்னங்களை நிறுவ முயற்சிக்கின்றார்கள்
இந்திய மீனவர்களுக்கு வடக்கு கடலில் அனுமதி அளிக்க முயற்சிக்கின்றார்கள்
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 26 இடங்களை தொல்லியல் சார்இடங்களாக அறிவித்து சுவீகரிக்க முயற்சிகின்றார்கள்
9,942 மக்களின் வாழ்வாதாரமான வலதுகரை காணிகளை மட்டக்களப்பில் அபகரிக்க பார்க்கின்றார்கள்
சங்கானை மத்திய கலாச்சார நிலையத்தை தொல்பொருள் சிதைவுகள் என்கிற பெயரில் ஊடக ஆக்கிரமிக்க எத்தனிக்கின்றார்கள்
வட்டுவாகல் கோத்தபாயா கடற்படை முகாம் காணிகளை நிரந்தரமாக அபகரிக்க முயற்சிகின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் 68 இடஙக்ளில் இராணுவத்திற்காக நிலங்களை நிரந்தரமாக அபகரிக்க முயலுகின்றார்கள்



