கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிக்க இடங்கள் தெரிவு - விரும்பியோர் விண்ணப்பிக்கலாம் ஆளுநர் தெரிவிப்பு

#government #Governor #Cow #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிக்க இடங்கள் தெரிவு - விரும்பியோர் விண்ணப்பிக்கலாம் ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கால்நடைகளைப் பராமரிப்பதற்கான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளை பராமரிக்க விரும்புவோர் ஆளுநர் செயலாதத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கு ஏற்ற இடங்களை தெரிவு செய்யுமாறு கேட்டதற்கு இணங்க 22 பிரதேச செயலகங்களில் அதற்கான இடங்களை தெரிவு செய்து அனுப்பி உள்ளார்கள்.

 யுத்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலம் முதல் இன்று வரை  கால்நடைகள், குறிப்பாக மாடுகள். பெருமளவில் உரிமையாளர்களால் கைவிடப்பட்டு கட்டாக்காலிகளாக பொது இடங்களில் அலைந்து திரிவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாரான கால்நடைகள் வீதிகளில் விபத்தக்குள்ளாகி இறப்பதும் நோய்வாய்ப்பட்டுச் சிகிச்சைகள் இன்றி மரணிப்பது மட்டுமின்றி, விவசாய மற்றும் பயிரச்செய்கை நிலங்களிற் யிர்களை நாசமாக்கி விவசாய்களுக்குப் பொருளாதாரப் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான கால்நடைகள் திருடப்பட்டு வயது பால் வித்தியாசம் இன்றி இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்களும் இடம் பெற்று வருவது மிகவும் கவலைக்குரியது.

 மனிதாபிமானச் சிந்தனையில் கையிடப்பட்ட கால்நடைகள் உள்னிட்ட சகல பிராணிகளுக்குமான நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

 அவற்றுக்கு உரிய முறையில் உணவளிக்கவும். நோய் மற்றும் பிற இயற்கை அனர்த்தம் உள்ளிட்ட காரணிகளால் இவ்விலங்குகள் பாதிப்படைவதைத் தடுப்பதற்கான செயன்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

இக் கருத்துக்கமையக் கால்நடைகளுக்கான பாதுகாப்பான காப்பகங்களைத் தேவைக்கேற்ப வடமாகாணம் எங்கும் அமைத்துப் பராமரிக்க திர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மேற்படி கால்நடைகளுக்கான பாதுகாப்புக் காப்பகங்களை விரும்பிய பகுதிகளில் அமைத்துப் பராமரிக்க விரும்பும் சமய ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்கள். அரச சார்புற்ற நிறுவனங்கள் மற்றும் மிருக வதைக்கு எதிரான இயக்கங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக்துடன் தொடர்பு கொண்டு  தமது விருப்பத்தினைக் கடிதம் மூலம் தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!